News
Loading...

அமீர்கானின் மாறுபட்ட நடிப்பில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் டிரைலர்

அமீர்கானின் மாறுபட்ட நடிப்பில் சீக்ரெட் ’சூப்பர் ஸ்டார்’ டிரைலர்

டெல்லி: சீக்ரெட் ‘சூப்பர் ஸ்டார்’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள அமீர்கானின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர்கானிற்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவருடைய வித்தியாசமான முயற்சிகள் அனைத்துமே வசூல் சாதனையாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கல்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதற்குள்ளாக மற்றொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் புதிய படம் ஒன்றில் அமீர்கான் நடித்து வருகிறார்.

ஒரு சிறுமி கனவு நிறைவேறியதா? இல்லையா? அதில் ஏற்படும் இடையூறுகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்கிறாள்? என்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமீர்கான் ’ஸ்பைக்’ ஸ்டைலில் முடியை அமைத்து, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சீக்ரெட் ‘சூப்பர் ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...