News
Loading...

பெண் காவலர் மீது மர்மநபர்கள் ஆசிட்வீச்சு.

பெண் காவலர் மீது மர்மநபர்கள் ஆசிட்வீச்சு.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் காவலர் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிசிலாம்பட்டுவைச் சேர்ந்த லாவண்யா என்பவர், திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று பணிமுடிந்து வீட்டிற்கு சென்ற லாவண்யாவைப் பின்தொடர்ந்த 2 மர்மநபர்கள், பீரான் தெரு அருகே வந்தபோது அவர் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதில் லாவண்யாவின் முகம், வலது மற்றும் இடது தோள்பட்டை காயம் ஏற்பட்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்