News
Loading...

நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல்..! வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்!!

நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல்..! வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்!!

திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவரும், அந்த கட்சியின் ராசியான நடிகராகவும் கருதப்பட்டு வந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர், நேற்று முன்தினம் அக்கட்சியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஜெயலிலதா இறந்த பின்னர் அந்த இடத்தை நிரப்புவது சாதாரண விஷயமல்ல. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று ஒரு தலைமையை காட்டுகின்றனர். எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் எந்த அதிருப்தியும் இல்லை. நான் கட்சியில் இருந்து விலகுவது எனது தனிப்பட்ட விருப்பம்.

இந்நிலையில், நடிகர் ஆனந்தராஜுக்கு நேற்று போன் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.  மிரட்டல் விடுத்தவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து, அவரின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்