News
Loading...

தொழிலதிபரை மணந்தார் நான் கடவுள் நடிகை!!

தொழிலதிபரை மணந்தார் நான் கடவுள் நடிகை!!

டிகை பூஜா உமாசங்கர் ஸ்ரீலங்கா தொழிலதிபர் பிரசான் டேவிட் வித்தகனை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவர் தல அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நான் கடவுள் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் பூஜா. இவருக்கும் அந்த நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயம் நடந்தது. ஆனால், ஒரு ஆண்டிலேயே இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.​

இந்நிலையில் நேற்று கொழும்புவில் ஸ்ரீலங்கா தொழிலதிபர் பிரசான் டேவிட் வித்தகனை பூஜா திருமணம் செய்து கொண்டார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...