News
Loading...

தம்பிதுரைக்குத் தடை!

தம்பிதுரைக்குத் தடை!

மிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் அல்லவா? அப்போது சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து யார் யார் பிரதமரை சந்திக்க வருகிறார்கள் என்று ஒரு லிஸ்ட் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், டெல்லி நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் பெயரும் இருந்தது. ஆனால், டெல்லியில் இருந்து ஓகே செய்யப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு வந்த லிஸ்ட்டில் தம்பிதுரை பெயர் இல்லை. இதுபற்றி டெல்லியுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘அவர் வருவதற்கு அனுமதி இல்லை. வேண்டுமானால், முதல்வரைவிட்டு தனியாக ஒரு கடிதம் அனுப்பச் சொல்லுங்கள்’ என்றனர். அதன்படி, தம்பிதுரையை அனுமதிக்கும்படி ஒரு கடிதம் அனுப்பினார். ஆனால், அதற்கு அங்கிருந்து பதிலே வரவில்லை. இதனால், தம்பிதுரையால் போகமுடியவில்லை.

இந்த சம்பவத்தைச் சொன்ன டெல்லி பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர், ‘‘மைத்ரேயனுக்கும் பிரதமர் மோடிக்கும் நல்ல நட்பு உண்டு. இதைப் பிடிக்காத சிலர், முன்பு ஜெயலலிதாவிடம் வத்திவைத்து அவரை ஓரங்கட்ட வைத்தார்கள். இதில் தம்பிதுரைக்கும் பங்கு இருக்கலாம் என்று மோடிக்குத் தகவல் போனதும் டென்ஷன் ஆகிவிட்டார். இப்படியாக, தம்பிதுரைக்கும் பி.ஜே.பி-க்கும் உரசல் ஆரம்பித்துவிட்டது. பிரதமர் நாடாளுமன்றத்தில் நுழைந்ததும் எதிர்க் கட்சி வரிசையில் உள்ளவர்களைப் பார்த்து வணக்கம் சொல்வார். அப்போதும் தம்பிதுரை இருக்கும் திசை நோக்கி மறந்தும் திரும்ப மாட்டார் பிரதமர். மேலும் தேசிய வங்கியில் இயக்குநர் பதவி, உணவு கார்ப்பரேஷன் உறுப்பினர் பதவி... இவற்றில் சிலரை நியமிக்கச் சொல்லி தம்பிதுரை தரப்பில் சிபாரிசு செய்தவர்களை பி.ஜே.பி. கண்டுகொள்ளவில்லை. இப்போது சொல்லுங்கள்! தம்பிதுரையை பி.ஜே.பி. அரசு முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்யுமா?” என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்