News
Loading...

செயல்படாத தமிழக அரசு: பொதுமக்களே மேம்பாலத்தை திறந்தனர்

செயல்படாத தமிழக அரசு: பொதுமக்களே வடபழனி மேம்பாலத்தை திறந்தனர்

சென்னை : கோயம்பேட்டில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் சாலையயை இணைக்கும் வகையில் சென்னை வடபழனி 100 அடி சாலையில் ரூ.56 கோடி செலவில் மேம்பாலம் கட்ட கடந்த 2011ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் பணி மேம்பால பணி நடந்ததால் வடபழனி சிக்னல் அருகே மேம்பாலம் கட்டும் பணி தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால், பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. இவ்வாறு மந்த கதியில் பணிகள் நடந்ததால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை இப்பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டதன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலப்பணி முடிந்தது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு வாகன ஓட்டிகளே பேரிகார்டை அகற்றி பாலத்தை பயன்படுத்த தொடங்கினர். இந்த தகவல் போக்குவரத்து போலீசாரக்கு தெரிவிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகளை அமைத்தனர். இதற்கு ெபாதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பேரிகார்டை அகற்றி பொதுமக்களே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வட பழனி சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் சாஜா குணா கூறியதாவது. இந்த பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி முடிந்து பல மாதங்களாகியும் தமிழக அரசு திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பாலம் கட்டும் பணி முடிந்தும் திறக்கப்படாததால், பொதுமக்களே சேர்ந்து திறக்கும் நிலைக்கு அரசு எங்களை தள்ளியுள்ளது. இனி வருங்காலங்களிலாவது அரசு நிர்வாகம் முறையாக செயல்பட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...