News
Loading...

இரண்டாவது முறையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

இரண்டாவது முறையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவருகிறது என அம் மருத்துவமனை தெரிவித்து வந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதய செயல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நேற்று தெரிவித்தது. மேலும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், முதல்வருக்கு அதிகபட்சமாக என்ன செய்ய முடிமோ அதை செய்தோம். . ஜெயலலிதாவுக்காக நான் பிராத்தனை செய்து கொள்கிறேன் என்று தனது அறிக்கை மூலம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது எனவும், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் சற்று முன்னர் நடைபெற்று முடிந்தது எனபது கவனிக்கத்தக்கது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வரின் உடல்நிலை குறித்து மூத்த அமைச்சர் ஒருவர் விவரித்ததாகவும், அப்போது அங்கிருந்த எம்எல்ஏ-க்கள் பலர் கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், சில முக்கிய முடிவுகள் அங்கு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

English Summary : AIADMK MLA's Second meeting at evening

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...