News
Loading...

சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்!! மொட்டை அடிக்கும் அதிமுக அமைச்சர்கள்!!

சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்!!.. மொட்டை அடிக்கும் அதிமுக அமைச்சர்கள்!!..

திமுக கட்சிக்கு தலைமையேற்று, சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இதனையடுத்து, புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதனிடையே ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கட்சி பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சமாதியில் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர்.இராமச்சந்திரன், கடம்பூர் ராஜு ஆகியோர் இன்று காலை அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிட்டு அதிமுகவிற்கு தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.

அதிமுகவுக்கு சசிகலா தலைமேற்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும், மக்கள் சேவையில் அனுபவம் பெற்ற சசிகலா அரசியல் சேவையும் ஆற்ற வேண்டும் என்றும் உதயகுமார் குறிப்பிட்டார்.

மேலும் அதிமுகவுக்கு தலைமையேற்று சசிகலா தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்றும் கூறினார். இதற்காக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்‌பூர் ராஜூ ‌ஆகிய மூவரும், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட‌ இடத்தில்‌ இன்று மொட்டை அடிக்கவுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்