News
Loading...

அதிமுகவை பாஜக கட்டுப்படுத்த கூடாது! இப்படி சொன்ன சேகர் ரெட்டி வீட்டில் தான் ரெய்டு!


பா.ஜ.க.சவகாசமே நமக்கு வேண்டாம் என்று சஜ்ஜசன் சொன்னதற்காகவே ஆளுங்கட்சி பெயரை சொல்லி சம்பாதித்த தொழிலதிபர்கள் வீட்டில் மத்திய அரசு ரெய்டு நடத்த உத்தரவிட்டதாம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். சாதாரண வால் பேப்பர் ஒட்டும் தொழில் செய்து வந்தார். பின்னர் அ.தி.மு.க.வில் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டவர்களுக்கு சேவகம் செய்து பல்வேறு இடங்களில் மணல் அள்ளும் உரிமத்தை பெற்றார். பிறகு சேகர் ரெட்டியானார்.

இதில் பல நூறு கோடிகளை சம்பாதித்தார். கார்டனில் முக்கிய புள்ளியாகவும் வலம் வந்தார். அவரை கார்டனுக்கு அறிமுகம் படுத்திவைத்த வெங்கடேஷை கூட கழற்றிவிட்டவர்கள் சேகர் ரெட்டியை கழற்றவில்லை. இதனால் அவருக்கு செல்வாக்கு கூடியது.

தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் இவர் நெருங்கிய நண்பரானார்.
மேலும் ஜெயலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது திருப்பதிக்கு சென்று பிரார்தனை எல்லாம் செய்தவர். இந்நிலையில் முதல்வர் இறந்து அவரை அடக்கம் செய்யப்பட்ட பின்னர் பா.ஜ.க. அ.தி.மு.க.வை வளைத்து போட முயல்வதாக பேசப்பட்டது.

கட்சிக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் கூட அந்த கட்சி தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக கருதியது. இதற்கு எதிராக மணல் அள்ளும் தொழில் அதிபர் சேகர் ரெட்டி நடவடிக்கையில் இறங்கினாராம். அதற்கு கடிவாளம் போடவே இந்த ரெய்டு என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரெய்டு மேலும் தொடரும் என்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...