News
Loading...

செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த அதிமுக பிரமுகரின் மகன் உள்பட 2 பேர் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த அதிமுக பிரமுகரின் மகன் உள்பட 2 பேர் கைது

சென்னை: செயின் பறித்த பின்னர் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிய 2 வாலிபர்களை காவலர் ஒருவர் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டிச் சென்று மடக்கி  பிடித்தார். சென்னை முகப்பேர் கிழக்கு காந்தி தெருவை சேர்ந்தவர் டீனா (36), ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று  முன்தினம் மதியம் 2.30 மணிக்கு ஆயிரம்விளக்கு ஆண்டர்சன் தெரு ஆசான் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த 2  பேர் டீனாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர். 

இதை சற்றும் எதிர்பாராத டீனா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற காவலர் முத்துக்குமார் என்பவர் செயினை பறித்து  தப்பிய நபர்களை விரட்டி சென்றார். மின்னல் வேகத்தில் சென்ற திருடர்களை காவலர் முத்துக்குமாரும் விடாமல் பின்தொடர்ந்தார். சரியாக நுங்கம்பாக்கம் கண்பத்  ஹோட்டல் அருகே காவலர் முத்துக்குமார் அவர்களை சேசிங் செய்து பிடித்தார். இந்த சம்பவம் சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு  இருந்தது. இதை தொடர்ந்து  முத்துக்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து  போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சேத்துப்பட்டு பிருந்தாவன் 5வது தெருவை சேர்ந்த முருகா (எ) விக்கி (19), சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் 6வது  தெருவை சேர்ந்த ஆகாஷ் (19), இவருடைய அப்பா சம்பத் எழும்பூர் பகுதி அதிமுக நிர்வாகி என்று கூறப்படுகிறது. இவர்கள் ஒரே நாளில்  மயிலாப்பூரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி ெகாண்டிருந்த அம்பத்தூரை சேர்ந்த பாக்கிய லட்சுமி என்பவரிடம் 5 சவரன் நகையும், அதே சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்த பெரம்பூரை சேர்ந்த பியூலா(27) என்பவரிடம் 4 சவரன் நகையும், மந்தைவெளியை சேர்ந்த அனுபிரியா(22) என்பவரிடம் 1 சவரன் நகையும்,  மேலும், பெரிய மேட்டில் ஒரு பெண்ணிடம் ெசயின் பறிப்பில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. 

இதில், அதிமுக நிர்வாகியின் மகனான ஆகாஷ் டிப்ளமோ படித்து வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹோண்டா மற்றும் யமஹா ஆகிய 2 பைக்குகள்,  10 சவரன் தங்க நகைகள், 2 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...