News
Loading...

சின்னம்ம்ம்ம்ம்மா…. வாங்கம்மா, கட்சியை காப்பாத்துங்கம்மா! மீடியாக்கள் முன் சீனியர்களின் டிராமா!!

சின்னம்ம்ம்ம்ம்மா…. வாங்கம்மா, கட்சியை காப்பாத்துங்கம்மா! மீடியாக்கள் முன் சீனியர்களின் டிராமா!!

சிகலாதான் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் என கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அதற்காக கட்சி சீனியர்களை தோட்டத்துக்கு வரவழைத்து டிராமாவே போட்டுள்ளனர். சின்னம்மா இல்லைன்னா அ.தி.மு.க.வை யாராலும் காப்பாற்ற முடியாதாம்.

அதனால் சீனியர்களான அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் தலைமையிலான கட்சி சீனியர்கள் சசிகலாவை சந்தித்து, சின்னமா வாங்கம்மா, கட்சியை காப்பாத்துங்கம்மா என்று கையெடுத்து கெஞ்சி அழைத்தனர்.

ஏற்கனவே சொல்லிக் கொடுத்ததை கரெக்டாக சொல்கிறார்களா என்பதை கவனமாக வாட்ச் செய்த சசிகலா, கண்ணீர் வராமலேயே அவ்வப்பொழுது  கண்களை துடைத்துக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமாய், மெய்காப்பாளராக விளங்கிய சென்னை கிங் மதுசூதனன்  சசிகலாவை இருகரம்கூப்பி கும்பிட்டபடியே நின்றுக்கொண்டிருப்பதை பார்க்க பரிதாபாக இருந்தது.

சசியை பொறுப்பேற்குமாறு கெஞ்சி கூத்ததாட வந்த சீனியர்கள் அனைவருமே நேற்று வரை சசிகலாவை புறக்கணிக்கும் டீமில் இருந்தவர்கள்.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அடியோடு சரண்டர் ஆகிவிட்டனர்.

இவர்கள் ஊடகங்களுக்கு முன்கூட்டியே சொல்லி அழைத்து வந்து   கேமிராக்கண்களுக்கு முன்னிலையில் நடத்தி கெஞ்சி கூத்தாடினர்.

இவ்வளவு பிரச்சனை நடக்கிறது ஒரு வார்த்தை கூட பேசாமல் தனக்கு சாதகமான சூழலை உருவாக்கி கொள்ள முயன்று அதில் வெற்றி பாதையில் அடியெடுத்து வைக்கும் சசிகலா, கட்சிக்கு தலைமை பொறுப்பில் அமர்ந்தால் மேடையில் மைக் பிடித்து பேசுவாரா?

அட்லீஸ்ட் பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில்  நின்று என்னை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லுவாரா என்பது பலரும் எதிர்பார்க்கும் கேள்வி.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை அந்த கட்சியின் சட்ட திட்டங்களில் 1973 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஒரு திருத்தத்தை கொண்டு வந்தார்.அதன்படி பொதுக்குழு என்பது பேசி முடிக்கக்கூடியதாக இல்லாமல், அ.தி.மு.க.வில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் அளித்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பொறித்திருக்கிறார்.

அதற்கு முன்னர் சட்டவிதி வேறு மாதிரி இருந்தது.

சசி என்கிற சின்ன அம்மா என்னதான் பிரயத்தனம் செய்தாலும் பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் அவர் ஆஜராகி அதில் தேர்வாக வேண்டும்.

அந்த சமயத்தில் என்னவேண்டுமானாலும் நிகழலாம். என்ன நடந்தாலும் சீனியர்களையே கையெடுத்து கும்பிடவைத்த சசி அனைத்து பிரச்சனையும் ஆஃப் செய்து நினைத்ததை முடிப்பார் என்கிறார்கள்.

மேலும் தமிழகத்தில் நடக்கும் இந்த சிண்டிகேட் முறையை மோடி சுத்தமாக விரும்பவில்லை. இதனால் அடுத்த ஆபத்து ஒன்று வந்தால் அ.தி.மு.க.கப்பலுக்கு பெரும் சோதனை வந்துவிடும் எனப்படுகிறது.

இருந்தாலும் அதையெல்லாம் சமாளிக்க தனி ரூட்டு போட்டு வைத்திருக்கிறாராம் எம்.என் என்கிற எம்.நடராஜன்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.