News
Loading...

அதிமுக நிர்வாகிகளை திட்டி தீர்க்கும் தொண்டர்கள்..! போராட்டத்தில் பெண் ஆவேசம்..!!

அதிமுக நிர்வாகிகளை திட்டி தீர்க்கும் தொண்டர்கள்..! போராட்டத்தில் பெண் ஆவேசம்..!!

திமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து வேலூரில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

போராட்டத்தின்போது பெண் தொண்டர் ஒருவர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக நிர்வாகிகளை குறிப்பிட்டு சரியான ஆம்பளையா இருந்தா தனியா நின்னு ஜெயிச்சுட்டு வாங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிங்க பார்ப்போம் என்றும் அவர் சவால் விட்டதாக தெரிய வருகிறது.

அப்பெண் மேலும் கூறுகையில், தைரியம் இருந்தா, ஆம்பளையா இருந்தா உங்க பதவியை ராஜினாமா பண்ணுங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு வாங்க. அதுக்கெல்லாம் அருகதை இல்லைல்ல.

அம்மா கொடுத்த பதவியைக் காப்பாத்திக்கிறதுக்காக சம்பந்தமில்லாதவர்களின் கால்ல விழுந்து கும்பிடறீங்க. வெட்கமா இல்லை. வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம்.

அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை. உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு என்று அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலா கட்சி தலைமை பொறுப்பை ஏற்றது தொண்டர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உண்மை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்