News
Loading...

பிச்சை எடுத்த என்னை வழக்கறிஞர் ஆக்கியது அம்மா ஜெயலலிதா தான்!!

பிச்சை எடுத்த என்னை வழக்கறிஞர் ஆக்கியது அம்மா ஜெயலலிதா தான்!! நெகிழும் கர்நாடக பெண்!!..

றைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த நலத்திட்டங்கள் பற்றி பலரும் அறிவர். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் பாசம் காட்டிய எளிய மனிதர்கள் பற்றி பரவலாக அறியப்படவில்லை. அப்படி ஒருவர்தான், வழக்கறிஞர் நாகரத்னா!..

கர்நாடகாவின் மைசூர் பகுதியை சேர்ந்த சிறுமி நாகரத்னா, நகர வீதிகளில் பிச்சை எடுத்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு படிக்க ஆசை. அதனால், பிச்சை எடுத்துக்கொண்டே படித்தார். தங்க சரியான வீடு கூட இல்லாத நிலையில், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, 2001-ம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

ஆனால், அதற்கு மேல் படிக்க இயலாத அவரின் நிலைமை குறித்து, தினமணி நாளிதழில் செய்தியாக வெளியானது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்தச் செய்தியை, படித்து மனம் நெகிழ்ந்தார். உடனடியாக, அப்போதைய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியை அழைத்து, இதுகுறித்து விசாரித்தார்.

உடனே, மைசூருக்கு விரைந்த புகழேந்தி, அங்கு நாகரத்தினாவைத் தேடிக் கண்டுபிடித்தார். மறுநாள் அவர்கள் முதல்வரைச் சந்தித்தனர்’ .

ஜெயலலிதாவைச் சந்திக்க வாய்ப்பு அமைந்தபோது, அவரிடம் தன் கஷ்டங்களை எல்லாம் தெரிவித்தார் நாகரத்னா. பிறகு அவரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்த ஜெயலலிதா, அவரைப் படிப்பைத் தொடரச் சொல்லி வாழ்த்தியுள்ளார்.

‘அம்மாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்போது என் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்த அம்மா, ‘நன்றாகப் படி’ என்று தைரியம் ஊட்டினார்’ என்று சொல்லும் நாகரத்னா, அந்த காசோலையை வங்கியில் ஃபிக்ஸட் டெப்பாசிட் செய்து அதன் மூலம் கிடைத்த வட்டியில் படிப்பைத் தொடர்ந்தார்.

மைசூரில் உள்ள மஹாஜனாஸ் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி.படிப்பை முடித்து, தற்போது ரத்னா பெங்களூருவில் உள்ள சிவில் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். ‘பிச்சை எடுத்த நான் இன்று வழக்கறிஞராகி இருப்பதற்கு ஜெயலலிதா அம்மா தான் காரணம் என்றும், அவருக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என்றும் நாகரத்னா நெகிழ்ச்சியுடம் தெரிவித்தார்.

எப்படியாவது அம்மாவை மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் என்று துடித்து கொண்டிருந்ததாக ரத்னா கூறினார். ஆனால், அம்மாவின் இறப்புச் செய்தி கேட்டு என் இதயமே வெடித்ததுபோல் இருந்தது என்று கண்ணீர் மல்க நாகரத்னா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்திருக்கிறார்.

மறைந்தாலும், ஜெயலலிதா ‘புரட்சித்தலைவி’, ‘இரும்புப் பெண்’ என வரலாற்றின் புகழுரைகளிலும், தமிழக மக்கள் மனதில் ‘அம்மா’ என்ற சொல்லின் அன்பிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்