News
Loading...

எங்க அம்மா சொத்த பறிக்க..? விட மாட்டோம்..புயலா சென்னைக்கு கௌம்பிடுவோம்..!?

எங்க அம்மா சொத்த பறிக்க..? விட மாட்டோம்..புயலா சென்னைக்கு கௌம்பிடுவோம்..!?

சிகலா குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். அதனால் சசிகலாவை அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக ஆக்க கூடாது என்று தமிழகம் முழுவதும் எதிர்ப்புக்குரல் ஒலிக்கத்தொடங்கி உள்ளது.

மேல் மட்டத்தில் முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்தி கேட்டுக்கொண்டாலும் கூட தொண்டர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியவில்லை.

அமைச்சர்களும்,எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொள்வதற்காகவே சசிகலாவை ஆதரிக்கின்றனர். ஆர்.கே நகரில் நின்றால் தெரியும். வெற்றி பெறுகிறாரா இல்லையா என்று?

அம்மாவின் போயஸ் தோட்டத்தையும், மற்ற சொத்துக்களையும் அடைவதே அவர்கள் நோக்கமாக இருக்கிறது. விடமாட்டோம். போயஸ் கார்டன் அம்மாவின் நினைவகமாக மாற்றப்பட வேண்டும். சென்னையை வர்தா புயல் தாக்குகிறதோ இல்லையோ.. தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க தொண்டர் படை புயல்போல கிளம்பிவிடும்.

அதை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சசிகலாவுக்கு மறைமுகமாக எதிர்ப்பும் ஒருபுறம் வலுத்து வருகிறது.
விழுப்புரத்தில் அவரது பேனர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் சிலரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தற்போதைய சூழலில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது முடிவு தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்