News
Loading...

சசிகலாவை கண்டித்து தீ குளிப்பேன்: அதிமுக தொண்டர்கள் ஆவேசம்! சாலைமறியல்!

சசிகலாவை கண்டித்து தீ குளிப்பேன்: அதிமுக தொண்டர்கள் ஆவேசம்! சாலைமறியல்!

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்தில் சசிகலாவை கொண்டுவருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதிமுகவின் மூத்த தலைவர்கள் தம்பிதுரை, செங்கோட்டையன், மதுசூதனன் உள்ளிட்டோர் கட்சியை வழிநடத்துமாறு சசிகலாவைகேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரம் அதிமுகவில் ஒரு தரப்பினர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா வீடு அருகே பின்னி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சசிகலா கட்சியை வழிநடத்தக் கூடாது, வேறு யார் வேண்டுமானாலும் வழிநடத்தலாம் என்றனர்.

ஜெயலலிதாவை 75 நாட்கள் மறைமுகமாக வைத்து கொடுமைப்படுத்தியவர் சசிகலா என ஒரு தொண்டர் கொதிப்புடன் தெரிவித்தார்.

சசிகலா தலைமை பதவியை கைப்பற்றினால் தீக்குளிப்பேன் என்றார் மற்றொருவர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...