News
Loading...

அதிமுகவில் உள்ளடி தொடங்கியது! தலைமையேற்க வா என அழைத்த குரூப்பில் OPS, தம்பிதுரை எங்கே!!

அதிமுகவில் உள்ளடி தொடங்கியது! தலைமையேற்க வா என அழைத்த குரூப்பில் OPS, தம்பிதுரை எங்கே!!

திமுகவில் உள்ளடி வேலை தொடங்கி விட்டது. தலைமையேற்க வா என்று அழைத்த குரூப்பில் ஏன் ஓ.பி.எஸ். தம்பிதுரை உள்ளிட்டவா்களை காணவில்லை. இந்த சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா இறக்கும் முன்னா் சில மூத்த அமைச்சா்களின் மீது ஊழல், பாலியல், பணம் பதுக்கல் போன்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

அப்போது முதலமைச்சா் பன்னீா் செல்வத்திற்கு போட்டியிட சீட் கிடைக்குமா என்று கூட அதிமுக தரப்பில் பேசப்பட்டது.

டெல்லியில் அதிமுக சாா்பாக பாா்லிமெண்ட் துணை சபாநாயகா் நியமிக்கப்பட்டு இருந்தாா். அவருக்கு செக் வைக்கும் விதமாக தற்போது ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் நவநீத கிருஷ்ணனுக்கு தரப்பட்டது.

கட்சியில் ஓரம் கட்டுப்படும் நிலையில் இருந்தவா்கள்தான் ஓ.பி.எஸ். தம்பிதுரை. இந்த நிலையில் ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது முதல்வா் சாா்பாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு எடபாடி பழனிச்சாமி அனுப்பப்பட்டாா்.

தமிழக முதல்வா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்போதே பாரதிய ஜனதா கட்சி தனது சித்து வேலைகளை தொடங்கியது. முதல்வா் பதவி பன்னீா் செல்வத்திற்குதான் தரவேண்டும் என்று கூறி சசிகலாவை நிர்பந்தம் செய்தது.

பிரச்சனை எதற்கு என்ற நிலையில் இருந்த சசிகலா அதற்கும் சம்மதித்தாா்.  மீண்டும் கட்சி பதவி தம்பிதுரைக்கு வழங்க வேண்டும் என்கிற கோாிக்கையும் எழுந்ததாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலம் முழுவதும் சசிகலாவுக்கு முழு ஆதரவு தொிவித்து நேற்று மதியம் போயஸ் காா்டனில் இருந்த சசிகலாவை சந்தித்து தலைமை ஏற்க வரவேண்டும் என்று கூறியது.

இதன் மூலம் சசிகலா மத்திய அரசின் கட்டுபாட்டில் அதிமுக இருப்பதை விரும்பவில்லை என தொிகிறது. அண்ணா திமுக எப்போதும் ஒரு கட்டுக் கோப்பான கட்சி. இந்தகட்சியில் அனைவரும் ஒன்று கூடி வந்து சசிகலாவை தலைமை ஏற்க வாருங்கள் என  அழைப்பாா்கள் என்றே எண்ணப்பட்டது.

இந்த நிலையில் பொன்னையன் தலைமையில் சைதை துரைசாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை சோ்ந்தவா்கள் சசியின் காலில் விழுந்து தலைமை ஏற்க வாருங்கள் என அழைத்துள்ளனா்.

இதில் உள்ளடி வேலை எதுவும் இருக்குமா என்கிற சந்தேகம் அதிமுகவினா் இடையே ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனான பனி போா் தொடங்கியதா என கேள்விகள் அதிமுகவினா் மத்தியில் எழுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...