News
Loading...

ஜெ…அண்ணன் மகன் தண்ணி வண்டி தீபக், இளைஞர் பாசறை செயலாளர் ஆகிறார்?!

ஜெ…அண்ணன் மகன் தண்ணி வண்டி தீபக், இளைஞர் பாசறை செயலாளர் ஆகிறார்?!

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருடைய மகன் தீபக் அ.தி.மு.க.வில் முக்கிய பதவி வகிக்கப்போகிறாராம். அதற்கான திட்டத்தை சசிகலாவின் கணவர் நடராஜன் முன்னின்று செய்திருப்பதாக அ.தி.மு.க.பெரிசுகள் சில விம்முகின்றனர்.

எப்படியெல்லாம் வளர்த்த கட்சி, விரல் அசைவில் ஆட்டிப்படைக்கப்பட்ட கட்சி இன்று சொத்துக்காகவும், பதவி, பவிசுக்காகவும் சகட்டு மேனிக்கு கந்தலாக்கப்பட்டு வருவதாக குமுறுகின்றனர்.

அதில் ஒருவரிடம் பேசியதில் மந்திரிகளாக இருப்பவர்கள் மந்திரி பதவி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார்கள். கட்சிப்பதவியில் உள்ளவங்க நேரடியாக எதிர்க்காமல், கீழ் மட்ட தொண்டர்களை விட்டு எதிர்ப்பை பகிற முயல்கிறார்கள் . காரணம் அவரு க்கும் பதவி பயம், ஆசை.
இப்போ என்ன பிரச்சனைன்னா? அம்மா, ஆரம்ப காலத்துல இருந்து சேர்த்து வைத்த சொத்து, பணம், நகை இவைகளுக்கு சசிகலா எப்படி உரிமைக்கோர முடியும்.

அந்த பிரச்சனையை ரத்த உறவுகளான தீபாவும், தீபக்கும் கையிலெடுப்பார்கள் என்று சசி தரப்பு எதிர்பார்த்தனர்.
அதனால்தான் முன்னெச்செரிக்கையாக தீபக்கை தன் வலைக்குள் இழுத்து போட்டுக்கொண்டார்கள். தீபக்கை பொறுத்தவரை அது ஒரு தண்ணி வண்டி. ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் ஸ்கிராப்புகளை எடுக்கும் தொழிலை செய்து வந்தவர்.

அவருக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அம்மாவினுடைய அண்ணன் மகன் என்கிற ஒரே முகம் தான் அவருக்கு. ஆனால்,  அந்த தம்பியை போய் கட்சிக்கு கொண்டு வந்து இளைஞர், இளம்பெண் பாசறையின் மாநில செயலாளர் பதவி கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்.
அண்டை வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே என்று ஒரு பழமொழி உண்டு.
அந்த மாதிரிதான் எங்க தலைவர் ஆரம்பிச்சி வச்ச கட்சியை எங்கம்மா கட்டிக்காத்த கட்சியை இன்றைக்கு ஒரு குடும்பம் திட்டமிட்டு ஆக்கிரமித்துக்கொண்டது.

இதற்கெல்லாம் எதிர்ப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தீபக்கை வளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீபா சசியின் திட்டங்களுக்கு ஒத்துபோகவில்லை. இருந்தாலும் எந்த எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்று அதற்கும் பேச்சு வார்த்தை நடக்கிறது என்கிறாங்க என்று குமுறும் அந்த சீனியர், யாருங்க எதிர்க்க போறாங்க அவ்ளோதான் எங்க தலைவர் கனவு என்கிறார் விசனமாக.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...