News
Loading...

சிகிச்சை அளிக்க தடைவிதித்தார்கள்? எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை!

சிகிச்சை அளிக்க தடைவிதித்தார்கள்? எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை!

ப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவருடைய மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். இந்தஅறிக்கை குறித்து மின்னம்பலம் இணையதளம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதாவது ஜெயலலிதாவிற்கு சில சிகிச்சைகள் கொடுப்பதற்கு சிலர் கேட் கீப்பர்களாக அதாவது தடையாக இருந்தார்கள் என அந்த அறிக்கையில் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் எந்த தடையும் இல்லாமல் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை அளித்ததாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...