News
Loading...

ரூ.470 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்.. முன்னாள் தளபதி கைது..!

ரூ.470 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்.. முன்னாள் தளபதி கைது..!

த்தாலி நாட்டைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேன்ட் என்ற நிறுவன ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாகவும், கருப்பு பூனைப் படைக்காக வாங்கிய ஹெலிகாப்டரில் 470 கோடி ரூபாய் ஊழல் பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில்  முன்னாள் விமானப்படை  தளபதி சஞ்சீவ் தியாகி கைது செய்யப்பட்டார்.

அவருடன் தில்லியை சேர்ந்த வக்கீல்கள் சஞ்சீவ் தியாகி, தொழிலதிபர் கவுதம் கைதான் ஆகியோரையும் சி.பி.ஐ.போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி, விமானப் படைத் தளபதியாக இருந்தது எஸ்.பி.தியாகி, கருப்புப் பூனைப் படையின் தலைவராக இருந்த பி.வி. வான்சோ  தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த  நாராயணன் ஆகியோர் கருப்புப் பூனைப் படைக்காக ஹெலிகாப்டர்களை விமானப் படைக்கு வாங்க அனுமதி அளித்தனர்.

இதில் கைமாறிய  ரூ. 470 கோடி லஞ்சம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்று விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...