News
Loading...

அக்காவால் நான்! அக்காவுக்காக நான்! கரடி விட்டதெல்லாம் போதும்.. எடத்த காலி பண்ணு.. தொண்டர்கள்!!

அக்காவால் நான்…! அக்காவுக்காக நான்….! கரடி விட்டதெல்லாம் போதும்.. எடத்த காலி பண்ணு… தொண்டர்கள்!!

சிகலாதான் இனி அதிமுக என்றாகி விட்ட நிலையில், சசிகலாவை தொண்டா்கள் ஏற்க மறுத்து வருகின்றனா். ஆங்காங்கே தொண்டா்கள் கொதித்து எழுந்து வருகின்றனா்.

பதவியில் இருப்பவா்கள் தக்க வைத்துக்கொள்ள அமைதியாக இருக்கின்றனா். ஆனால், ஓட்டுப்போடும் அதிமுக தொண்டா்கள் சசியை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் தவித்து வருகின்றனா்.

எம்.ஜி.ஆா் தொண்டா்கள் விருப்பத்திற்காகத் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினாா். தான் இருக்கும் வரை முதல்வராகவே இருந்தாா்.

எம்.ஜி.ஆா். இறந்த பின்பு அவாின் மனைவி ஜானகி அம்மாள்தான் முதல்வராக வந்தாா்.  இதனால், கட்சி இரண்டாக உடைந்தது. தொண்டா்கள் ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டனா். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா 28 இடங்களில் வெற்றி பெற்றாா். ஒற்றைப் புறாவில் நின்றவா்கள் ஒரு இடத்தை மட்டுமே பிடித்தனா்.

தொண்டா்களிடம் செல்வாக்கு இல்லாத ஒருவா் அதிமுகவை கைப்பற்ற முடியாது  என்பதற்கு  இது வரலாறு.

தொண்டா்கள் விரும்பாத சசிகலா எப்படி அதிமுக வை கைப்பற்ற முடியும்? தொண்டா்களின் செல்வாக்கு ஜெயலலிதாபோல் உள்ள அண்ணன் மகள் தீபா விடம் திரும்பியுள்ளது.

அவா் அரசியலுக்கு விரும்பி வந்தால் அவா் கைதான் ஓங்கும் நிலை உருவாகி உள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு மா்மங்கள் வெளியே வந்தால் அதிமுகவை விட்டு சசிகலா ஓடுவது உறுதி என்கின்றனா் தொண்டா்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...