News
Loading...

அதிமுகவுடன் கூட்டணியா..? வெங்கய்ய நாயுடு பரபரப்பு பேட்டி..!

அதிமுகவுடன் கூட்டணியா..? வெங்கய்ய நாயுடு பரபரப்பு பேட்டி..!

மிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய  நாயுடு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா காலமாகி சில நாட்களே ஆன நிலையில் பாஜக, அதிமுக கூட்டணி குறித்து பேசுவது சரியல்ல.

இந்த கூட்டணிக்கான காலங்கள் இன்னும் கனியவில்லை. தேர்தலுக்கு காலங்கள் இருக்கிறது. மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசுக்கு ஒரு சில மசோதாக்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.

எனவே அதிமுகவும், பாஜகவும் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் கூட்டணி அமைக்குமா என்று தற்போது கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...