News
Loading...

ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,20,000 பணம்! மத்திய அரசு தீவிரம்!

ஏழைகளுக்கு வீடு கட்ட  ரூ.1,20,000 பணம்! மத்திய அரசு தீவிரம்!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் 2 கோடிப் பேருக்கு வீடு கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி தகுதியுள்ள பெண்களுக்கு மாநில அரசுகள் நிலத்தை ஒதுக்கினால், வீடுகட்ட தேவையான நிதி ஒதுக்கித் தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மிகவும் நலிவடைந்தவர்களுக்கு கட்டித்தரப்படும் இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர், எரிவாயு சிலிண்டர் இணைப்புகளும் கூடுதலாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின்படி 60 சதவீத வீடுகள், மண் குடிசைகளில் வாழும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ராம் கிரிபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் சமவெளி பகுதிகளில் வாழும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.  இதுமட்டுமல்லாமல் கழிவறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் 90 நாட்கள் வேலை வழங்கப்படும்.

மலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதை விட கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதாவது வீடு கட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்படும்.

சில மாநிலங்களில் போதிய அளவு நிலம் வழங்கிவிட்ட நிலையில் சில மாநிலங்கள் இன்னும் நிலங்களை ஒதுக்கீடு செய்யவில்லை.

இந்த திட்டத்தின் படி கட்டப்படும் வீடுகள் ஜியோ டேகிங் செய்யப்படுகின்றன. அதாவது கூகுள் தேடுபொறியிலேயே இந்த திட்டத்தின்படி இந்திய வரைபடத்தில் எங்கெங்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு வெளிப்படைத்தன்மையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்