News
Loading...

அமேசானில் பயன்படுத்திய பொருட்களை ஆன்லைனில் விற்கலாம்


மேசானின் ‘Sell as individual' மூலம், பயன்படுத்திய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்கலாம்.

இந்தியாவில் அமேசான் நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து பொதுமக்களின் வரவேற்பை பெற்று, ஆன்லைன் வர்த்தகத்தில் தவிர்க்க இயலாத இடத்தில் உள்ளது. ஆன்லைனில் பொருட்களை விற்கும் செயலில் மட்டுமே ஈடுபட்டு வந்த அமேசான், தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

Sell as Individual என்ற பெயரில் பயன்படுத்திய பொருட்களை விற்பதற்கான சந்தையை உருவாக்கியுள்ளது. இந்த வசதி தற்போது பெங்களூருவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முயற்சியை பார்த்த பின்னர், அடுத்தடுத்த நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து விற்க வேண்டிய பொருள் குறித்த புகைப்படம் எடுத்து, விவரங்களுடன் பதிவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் வாடிக்கையாளரின் வீட்டிற்கே வந்தே பொருட்களை வாங்கிச் செல்வர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்