News
Loading...

அம்மா குடிநீர் சின்ன அம்மா குடிநீராக மாறுகிறது!? ஜெயா டிவி., சசி.,டிவியாக உருமாறுகிறது?!

அம்மா குடிநீர் ‘சின்ன அம்மா’ குடிநீராக மாறுகிறது..!? ஜெயா டி.வி., சசி.,டிவியாக உருமாறுகிறது..?!

மிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்திற்கு அவரது தோழி சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுவரை ஜெயலலிதாவிற்கு முக்கியத்துடம் கொடுத்து, வீடியோ ஒளிபரப்பி வந்த ஜெயா டி.வி.,கடந்த இரண்டுநாட்களாக சசிகலா வீடியோவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருவதால், இது வரை ஜெயா டி.வி.,என்ற நிலை மாறி சசி டி.வி. என்றாகிவிட்டது என வலைதளத்தில் சிலர் பரப்பிவருகின்றனர்.

அதே போல் தமிழகம் முழுவதும் பஸ்நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர் பாட்டிலில் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.

அந்த படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. விரைவில் அதில் சசிகலா படத்துடன் ‘சின்ன அம்மா’ குடிநீர்   என வரப்போவதாக அ.தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்