News
Loading...

கருப்புப் பணம் மாற்றப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

கருப்புப் பணம் மாற்றப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

சேலம், கடலூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 201 கோடி ரூபாய் அளவில் பழைய ரூபாய் தாள்கள் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மொத்தமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கும் அதிக மதிப்பில் பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ் அதில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் பணம் தான் அதிகம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களே இயக்குனர்கள் மற்றும் தலைவர்களாக பதவி வகிப்பதால் அவர்களும் இந்த கருப்புப் பண வெளுப்புக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் தலைவரும், அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவருமான இளங்கோவன் வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது இதை உறுதி செய்வதாக கூறியுள்ள அன்புமணி ராமதாஸ் போலி பெயர்களில் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளவர்கள் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் என்பதால் இது குறித்து தனி விசாரணை நடத்த தமிழக ஆளுனரும், தலைமைச் செயலரும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...