News
Loading...

குடும்ப நண்பரை மணக்கிறார் அனுஷ்கா

குடும்ப நண்பரை மணக்கிறார் அனுஷ்கா

னுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. பட வாய்ப்புகளும் பெரும்பாலும் குறைந்துவிட்டது. இதற்கிடையில் பிரபாஸ், ஆர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசு வந்தது. அதில் உண்மை இல்லை என்று அனுஷ்கா குறிப்பிட்டிருந்தார். அனுஷ்காவுக்கு பிறகு நடிக்க வந்த சில நடிகைகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் அனுஷ்காவுக்கு வயது அதிகரித்து கொண்டே போவதை எண்ணி குடும்பத்தினர் வருந்தினர். திருமணம் செய்து கொள்ளும்படி கடந்த சில ஆண்டாகவே கூறிவருகின்றனர். அதை காதில் வாங்காமல் நடிப்பிலேயே கவனமாக இருந்தார். 

பாகுபலி படம் முடிந்தபிறகு திருமணம் செய்துகொள்வதாக கூறியிருந்த அனுஷ்கா அடுத்தடுத்து புதிய படங்கள் ஒப்பு கொண்டதுடன் பாகுபலி 2ம் பாகத்திலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். இப்படியே விட்டால் சொல்பேச்சை கேட்கமாட்டார் என்று முடிவு செய்த குடும்பத்தினர் பெங்களூரில் உள்ள தங்கள் குடும்ப நண்பர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்திருக்கின்றனர். அவரை மணக்கவும் அனுஷ்கா சம்மதம் 
தெரிவித்திருக்கிறாராம். 

பாகுபலி 2ம் பாகத்தை முடித்திருக்கும் அனுஷ்கா, அடுத்து ஓம் நமோ நாராயணா படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. அடுத்த 3 மாதத்திற் குள் திருமணத்தை முடிப்பதற்கு ஏற்றவகையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  இதற்கிடையில் ஒன்றிரண்டு திருமண தேதிகளையும் குடும்பத்தார் அனுஷ்காவிடம் தெரிவித்திருக்கின்றனர். அதில் ஒன்றை அவர் தேர்வு செய்வாராம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...