News
Loading...

ஜெயலலிதாவின் மரணம் சதி!!… இந்த வீடியோ வெளியானால் மர்மம் விலகும்!!…

ஜெயலலிதாவின் மரணம் சதி!!… இந்த வீடியோ வெளியானால் மர்மம் விலகும்!!…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலமானதாக இரவு 11.30 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், இவரது இறப்பில் பலருக்கு சந்தேகம் எழுந்தது. காரணம் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி லேசான காய்ச்சல் என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் குறித்து அதன் பிறகு எந்த புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை.

அவருக்கு சர்வதேச அளவிலான தொழில்நுட்பத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவ்வப்போது, அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை மட்டும் வெளியிட்டது.

மக்கள் எவ்வளவோ கேட்டும் கடைசி வரை அவரது ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போது கூட அது குறித்த செய்தி தகவலாக மட்டுமே வெளியானதே தவிர அது குறித்து வீடியோ வெளியாகவில்லை.

அடுத்ததாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வீடியோ, புகைப்படமோ கூட வெளியாகவில்லை. இது மக்களிடைய சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியது.

மேலும் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை, கேட்டால் அவருக்கு நோய் தொற்று இருப்பதால் அது மற்றவர்களுக்கும் பரவும் என்று தெரிவித்தனர். ஆனால், அவருடன் இருந்த அவரது தோழி சசிகலாவுக்கு மட்டும் ஏன் நோய் தொற்று ஏற்படவில்லை. அவர் மட்டும் எவ்வாறு ஜெயலலிதாவுடன் இருந்தார்.

இந்த மர்மம் அனைத்தும் விலக வேண்டும் என்றால் அது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நினைத்தால் மட்டுமே முடியும்.

ஜெயலலிதா மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நேரத்தில் அவரை சாதாரண வார்டில் இருந்து, அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்த சென்ற வீடியோவை மட்டும் வெளியிட்டாலே போதும், அனைத்து கேளிவிகளுக்கும் சந்தேங்களுக்கும் விடை கிடைத்துவிடும்.

ஆம், அந்த வீடியோ இருந்தால் போதும் அவர் உயிருடன் இருந்தாரா அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டாரா, அல்லது அவர் எப்போது உயிரிழந்தார் என்பதை எல்லோரும் அறியலாம்.

ஆனால், இந்த வீடியோவை அப்பல்லோ நிர்வாகம் வெளியிடுமா? பார்க்கலாம், காலம் பதில் சொல்லும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.