News
Loading...

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்! விவரிக்கும் அப்பல்லோ ரெட்டி!

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்! விவரிக்கும் அப்பல்லோ ரெட்டி!

செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா செப்டம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அதிகாரப்பூர்வமான அறிக்கை அப்பல்லோ சார்பிலோ, தமிழக அரசு சார்பிலோ வெளியிடப்பட்டவில்லை. இந்நிலையில் அப்பல்லோ உரிமையாளர் பிரதாப் ரெட்டி ஆங்கில ஏடு ஒன்றிற்கு கட்டுரை வரைந்துள்ளார். அதன் சுருக்கம் ”   செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நான் அவரை கண்காணித்துக் கொண்டிருந்தேன். இந்த 2 மாதங்களும் சென்னையை விட்டு நான் வெளியேறவில்லை. அவருக்கு அளிக்கப்படும் மருத்துவத்தை என்னால் முடிந்த வரை  நேரில் ஆய்வு செய்து வந்தேன்.  ஜெயலலிதாவை விரைவில் குணப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

அவர் மரணம் அடைவதற்கு முன்,  நான் ஐதராபாத்திற்கு போக வேண்டிய தேவை ஏற்பட்டது.  அது  ஒரு, ஒரு நாள் பயணம்.  செல்வதற்கு முன்பு கூட ஜெயலலிதாவை சந்தித்தேன். அவர் நலமாக இருந்தார். என்னை வழக்கமான சிரித்த முகத்துடன் பார்த்தார். அப்போது அவர் டி.வியில் அவர் படம் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் ஐதராபாத்தில்  இருந்து நான் திரும்பும் போது நீங்கள் எழுந்து நடப்பீர்கள்’ என்று கூறினேன்.

ஐதராபாத்தில் இருந்து திரும்பியதும் அவரை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்கிற சிந்தனையும் எனக்குள் இருந்தது. திரும்பி வந்ததும் அது பற்றி முடிவெடுக்கலாம் என்று யோசித்தவாறு கிளம்பினேன். ஆனால், அங்கிருந்து திரும்பியதும் முதலமைச்சருக்கு ‘கார்டியாக் அரெஸ்ட்’ என்றார்கள். இதயநோய் நிபுணர் ஒருவர் ஜெயலலிதாவை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு தான் இருந்தார். கார்டியாக் அரெஸ்ட் வந்தது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அவரது இதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான எந்த அறிகுறியும் அது வரை இல்லை.

கார்டியாக் அரெஸ்ட் என்றதும் அடுத்த நொடியே எங்கள் குழு சிகிச்சையை தொடங்கி விட்டது. இதனை மருத்துவத்துறையில்  ‘கோல்டன் ஹவர் ‘ (பொன்னான நேரம்) என்று நாங்கள் குறிப்பிடுவோம். அவர் சிகிச்சை எடுத்த அறையில் இருந்து 2  அறைகள் தள்ளித்தான் ‘எக்மோ ‘ சிகிச்சை அளிக்கப்படும் அறை இருந்தது. கார்டியாக் அரெஸ்ட் தாக்கிய பலர்   எக்மோ சிகிச்சை கொடுக்கப்பட்டு பிழைத்து வீடு திரும்பியிருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை.” இவ்வாறு அந்தக் கட்டுரையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்