News
Loading...

ஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ்?! அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்!

ஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ்?! அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்!

ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை பீஸ் எவ்வளவு? அதை யார் கட்டினார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. இதுகுறித்து விரைவில் அப்பல்லோ முழு அறிக்கை வெளியிடும் என கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முழு விபரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

இதன்காரணமாகவே தமிழக அரசு இன்னும் இதுகுறித்து முழு அறிக்கையை விடவில்லையாம். அப்பல்லோ அறிக்கை கொடுத்ததற்கு பிறகு பாத்துக்கொள்ளலாம் என இருக்கிறார்களாம். இந்நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சை செலவுகளுக்காக ரூ. 40 லட்சம் காசோலையை தமிழக அரசு சார்பில் அபூர்வ ராவ் அளித்தாராம். இந்த விசயம் தெரிந்த சசிகலா யாரும் காசு கொடுக்கத் தேவையில்லை! எவ்வளவு செலவானாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறிவிட்டாராம்.

இதனால் அந்த காசோலையை அப்பல்லோ வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாம். அதே நேரம் சிகிச்சைக்கு மொத்தம் 84 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த பணத்தை சசிகலா வழங்க உள்ளாராம். ஆனால் அப்படி வழங்கினால் அந்த பணத்திற்கு எப்படி கணக்கு காட்டுவது என யோசித்து வருகிறாராம். ஜெயலலிதாவின் ஏதாவது ஒரு சொத்தை விற்று மருத்துவமனைக்கு பீஸ் கட்டலாமா என ஆலோசித்து வருகின்றனராம்.

மற்றொரு கூடுதல் தகவல் என்னவென்றால் 75 நாட்களாக அப்பல்லோ கேண்டீனில் டீ , சமோஸா சாப்பிட்டதற்காக 20 லட்சம் பில் போடப்பட்டுள்ளதாம். சாப்பிட்டவர்கள் அமைச்சர்களும், மருத்துவமனைக்கு வெளியே இருந்த பத்திரிக்கையாளர்களும் தான் என கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...