News
Loading...

ஆங்கிலப் புத்தாண்டு…குடித்து விட்டு ஆடினால்.. அடி,உதைதான்..! இந்து மக்கள் கட்சி..!!

ஆங்கிலப் புத்தாண்டு…குடித்து விட்டு ஆடினால்.. அடி,உதைதான்..! இந்து மக்கள் கட்சி..!!

ந்து மக்கள் கட்சி.. தமிழகத்தில் பல புரட்சிகளை(?) செய்து கொண்டிருக்கிறது. காதலர் தினம் கொண்டாடும் காதலர்களை பிடித்து  அடித்து கதற கதற இழுத்து வந்து கட்டாயத் தாலி கட்டி வைப்பார்கள்.

ஆயுத பூஜையன்று துப்பாக்கி, ஏ.கே 47, பிகே 57 பீரங்கி, அணுகுண்டு போன்ற வெப்பன்ஸ் வைத்து பூஜைபோட்டு அதை நெட்ல போட்டு இந்திய இறையாண்மையைக் காப்பார்கள்.

பர்தா போடுவது பெண்களின் பாதுகாப்பு விஷயம் என்று சொன்ன மதுரை ஆதீனத்தை ஓட ஓட அடித்து விரட்டுவது போன்ற அரும்பணிகளை பெரும்பாடு பட்டு செய்து வருகிறது.

குறிப்பாக கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தன்னை ஆர்.எஸ்.எஸ்.நபர் அல்ல..நான் விஷ்வ ஹிந்து பரிஷத் அல்ல..

எனக்கு மோடியைப் பிடிக்காது..என் வழி தனி வழி என்று சொல்லிக் கொள்பவர்.இவர் சமீபத்தில்  கையில் எடுத்திருக்கும் விஷயம் ஆங்கிலப் புத்தாண்டு.

பார்ட்டி,பப், என்று எவனாவது குடித்து விட்டு ஆடினால் எங்கள்  கட்சி பார்த்துக் கொண்டிருக்காது.

அடித்து துவம்சம் செய்யும் என்று ஒரு அறிக்கை விட்டாராம். இந்த விஷயம் ஒன்று போதாதா நம்ப முகநூல் போராளிகளுக்கு. கழுவிக் கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளார்கள்.

குடிப்பதும் ஆடுவதும் தவறுதான். ஆனால் தனி ஒரு இயக்கம் அடிப்பதோ, வெட்டுவதோ எந்த வகையில் நியாயம் என்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...