News
Loading...

கண்ணாடி விரியனை பிடித்து போதையில் விளையாடியவர் பாம்பு கடித்து பரிதாப பலி

கண்ணாடி விரியனை பிடித்து போதையில் விளையாடியவர் பாம்பு கடித்து பரிதாப பலி

தேனி அல்லிநகரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (எ) அப்பாஸ் (42). கறிக்கடை தொழிலாளி. இவர் நேற்று தேனி பங்களாமேடு  பகுதியில் மது போதையில் 3 அடி  கண்ணாடி விரியன் பாம்பை கையில் பிடித்தவாறு சர்வ சாதாரணமாக நடந்து சென்றார்.  பின்னர் மக்கள் நடமாட்டம் அதிகம்  உள்ள ரோட்டில் நின்ற அவர், பாம்பை வைத்து விளையாட்டு காட்ட தொடங்கினார். 

பாம்பு அவரது பிடியில் இருந்து நழுவி கையை கடித்தது. இதில் அவரது கையில் ரத்தம் சொட்டியது. ஆனாலும் அவர் விடுவதாக இல்லை.  தீயணைப்பு வீரர்கள்,  நைசாக அவரை நெருங்கி, பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்பாஸை உடனே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சில  நிமிடங்களிலேயே, உடல் முழுவதும் விஷம் பரவி அவர் உயிரிழந்தார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...