News
Loading...

வெங்கய்ய நாயுடு வாட்சிங்!

வெங்கய்ய நாயுடு வாட்சிங்!

ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அந்த இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு. யார் யார் வருகிறார்கள் என்று கவனித்துக்கொண்டே இருந்தார். தமிழக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பை அவரிடம்தான் பிரதமர் மோடி ஒப்படைத்திருக்கிறார். அதற்கு முன்பு, ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது, பணத்தட்டுபாடு தொடர்பாக எதிர்க் கட்சி எம்.பி-க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது வெங்கய்ய நாயுடு அ.தி.மு.க எம்.பி-க்களின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனித்தாராம். நவநீதகிருஷ்ணன் எம்.பி., தி.மு.க எம்.பி-யான கனிமொழியுடன் பேசியது; வேணுகோபால் எம்.பி-யை காங்கிரஸின் பிரபல வி.ஐ.பி. மகன் ஒருவர் அழைத்துப்போய் ராகுலுடன் கைகுலுக்க வைத்தது... இதையெல்லாம் உடனுக்குடன் பிரதமர் மோடியிடம் தெரிவித்தாராம். சசிகலாதான் அ.தி.மு.க எம்.பி-க்களை டெல்லியில் சுதந்திரமாகப் பழகச் சொன்னதாக பி.ஜே.பி. மேலிடத்துக்கு அ.தி.மு.க எம்.பி. மூலம் தகவல் சென்றதாம். இதை அடுத்துதான் பி.ஜே.பி-யின் கோபப் பார்வை சசிகலா தரப்பினர் மீது திரும்பியதாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்