News
Loading...

காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்ப தயாராக இல்லை - வெங்கய்யா நாயுடு.

காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்ப தயாராக இல்லை -வெங்கய்யா நாயுடு.

50 ஆண்டுகால மோசமான ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 

டெல்லியில் பேசிய அவர், 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக விவாதம் நடத்த பாஜக தயாரா இருந்தும் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கியதாக குற்றம் சாட்டினார். கருப்பு பணம் மற்றும் ஏழ்மையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் மட்டுமே நடைபெற்றதாகத் தெரிவித்தார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமரை காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டுவதாக தெரிவித்த அவர், காங்கிரஸை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்