News
Loading...

கருப்புப் பணம் ரூபாய் நோட்டுகளாக இல்லை: ராகுல் காந்தி

கருப்புப் பணம் ரூபாய் நோட்டுகளாக இல்லை: ராகுல் காந்தி

ரூபாய் நோட்டுகளாக உள்ள அத்தனை பணமும் கருப்புப் பணம் இல்லை என்றும் கருப்புப்பணம் அத்தனையும் ரூபாய் நோட்டுகளாகவும் இல்லை என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் மேசனா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இப்படி ஒரு விளக்கத்தை அளித்தார்.

பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தை ஒரு ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு எடுக்க முடியாதபடி வங்கிகளிலேயே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மோடியின் திட்டம் என்றார். அப்படி வங்கியில் பணம் சேர்ந்தால்தான் பணக்காரர்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

ஒரு சதவீதமே உள்ள பணக்காரர்கள் வாங்கிய கடனைத் திருப்பி வாங்க மோடியால் முடியவில்லை. அதனால்தான் அவர்களின் வராக் கடன்களைத் தள்ளுபடி செய்ய ஏழைகளின் பணத்தைப் பயன்படுத்துகிறார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஒரு விவசாயி காசோலையோ கார்டுகளையோ பயன்படுத்தி அவருக்குத் தேவையான விதைகளை வாங்குவதில்லை. ரொக்கம் கொடுத்துத்தான் வாங்குகிறார். ஆனால் அந்தப் பணத்தை அவர்களிடமிருந்து மோடி பறித்துக் கொண்டார் என்றார் ராகுல் காந்தி. மோடி என்னை நாடாளுமன்றத்தில் பேச விடுவதில்லை. ஏன் எனக்கு நேராக அவர் நிற்பது கூட இல்லை என்றும் அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...