News
Loading...

கருப்பு பணத்தை வெள்ளையாக்க ரேஷன் கார்டுக்கு, 60 ஆயிரம்: சேகர் ரெட்டி தாராளம்!

கருப்பு பணத்தை வெள்ளையாக்க ரேஷன் கார்டுக்கு, 60 ஆயிரம்: சேகர் ரெட்டி தாராளம்!

வேலுார்: சேகர் ரெட்டியின் சொந்த ஊரில், ரேஷன் கார்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் வீதம் வினியோகிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அ.தி.மு.க.,வினருக்கு நெருக்கமான தொழிலதிபர், சேகர் ரெட்டி வீடுகளில், 8ம் தேதி, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, 132 கோடி ரூபாய், 177 கிலோ தங்கக் கட்டிகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். 

இதில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும், 35 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, எங்கெங்கு கொடுத்தார் என்பது தொடர்பாக, 50 பேரிடம்வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், சேகர் ரெட்டியின் சொந்த ஊரான, காட்பாடி அடுத்த தொண்டான் துளசியில், கிராம மக்களுக்கு, ரேஷன் கார்டுக்கு, தலா, 60 ஆயிரம் ரூபாய் வீதம், 1,200 பேருக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளாக, நேற்று வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

அந்த பணத்தை, ரெட்டி கேட்கும் போது, நான்கு தவணைகளாக, வட்டியில்லாமல் வழங்கும் படியும், அங்குள்ள மரத்தடியில் வைத்து, நேற்று காலை, 8:00 மணியளவில் சிலர், பணத்தை வினியோகித்ததாகவும் தகவல் பரவியது. தகவலறிந்த வருமான வரித்துறையினர், தொண்டான் துளசி கிராமத்திற்கு சென்று, வீடு வீடாக விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து, செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை, அக்கிராம மக்கள், '
நாங்க நல்லா இருப்பது பிடிக்கவில்லையா' என, கேட்டு திருப்பி அனுப்பினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...