News
Loading...

பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை... பகிர் ரிப்போட்

பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை... பகிர் ரிப்போட்

பாகிஸ்தானில் மார்டன் அடிமைகளாக இந்து மற்றும் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் கடனுக்காக அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பறித்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுகின்றனர்.

தெற்கு பாகிஸ்தானில் இப்படி பெற்றோர்களிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்ட சிறுமிதான் ஜீவ்தி (வயது 14). சிறுமியின் பெற்றோர் ரூ. 67 ஆயிரம் கடனத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கடன் கொடுத்தவர் பெற்றோர்களிடம் இருந்து பறித்துச் சென்று, திருமணம் செய்து உள்ளார். இதுபோன்று தெற்கு பாகிஸ்தானில் சுமார் 1000-த்திற்கும் அதிகமான பெண்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டு உள்ளனர். 

சிறுமி ஜீவ்தியின் தாயார் அமெரி காஷி கோக்லி பேசுகையில் ஒரு முடிவுக்கு வராத கடனுக்கு பதிலாக என்னுடைய மகள் அடிமையாக இழந்து உள்ளேன் என்று கண்ணீர் மல்க கூறிஉள்ளார். 

அமெரியும் அவருடைய கணவரும் ரூ. 33 ஆயிரம் வரையிலே கடனகா பெற்று உள்ளனர். ஆனால் ரூ. 67 ஆயிரம் என்று கடன் கொடுத்தவர்களால் கொடுமை செய்யப்பட்டு உள்ளனர். கடனை வசூலிப்பதாக கூறி அவர்களிடைய மகளை கொடூரமான முறையில் இரவோடு இரவாக கடத்திச் சென்றுவிட்டனர். பண்ணை தோட்டத்தில் பணிபுரிய வந்த அவர்களுக்கு வேலை தொடங்கியதும் ரூ. 33 ஆயிரம் வரையில் கடனாக வழக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. பின்னர் அவர்களை தோட்டத்தில் வேலை பார்க்கவிடாமல் உரிமையாளர் விரட்டியடித்து உள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று அவர்கள் பின்னர் கொடூரமான துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டு உள்ளனர். 

இந்த கொடூரத்தின் உச்சியில் தன்னுடைய மகளை இழந்து உள்ளனர். ஜீவ்திக்கு மட்டும் இக்கொடூரமானது நேரிடவில்லை. இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு மேல் ஏவிவிடப்பட்ட அட்டூழியம் இதுவாகும்.

இப்போதும் உலகில் அமெரி மற்றும் அவருடைய 14 வயது மகள் போன்றோர் ஒரு பொருளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்கள் கடனுக்காக கடத்தி செல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் நில உரிமையாளர்களால் கொடூரமான தண்டனையை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும். எதுவும் செய்யமுடியாத நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய மகளை இழக்கும் கொடூரமான தண்டனையை இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எதிர்க்கொண்டு வருகின்றனர். 

பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை... பகிர் ரிப்போட்

டிசம்பர் 1 : அமெரி காஷி கோல்கி அவருடைய மகளின் புகைப்படத்தை காட்டும் காட்சி. இரண்டாவது படம் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட சிறுமி.

சிறுபான்மையின பெண்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆண்களால் கோப்பைகளை போன்று நடத்தப்படுகின்றனர். அவர்கள் அழகின் அடிப்படையில் பெண்களை தேர்வு செய்கின்றனர். சிலர் சிறுமிகளை வீட்டு வேலை செய்ய இரண்டாவதாக திருமணம் செய்கின்றனர். சிலர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக பெற்றோர்களிடம் இருந்து பறித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து விபராசமும் செய்கின்றனர். அவர்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் சிறுமிகளை துன்புறுத்துகின்றனர் என்பது வெளிச்சத்திற்கு தெரியவந்து உள்ளது.

அமெரி பேசுகையில் “நான் போலீசிடம் சென்றேன், நீதிமன்றத்திற்கும் சென்றேன். யாரும் என்னுடைய வேதனையை கேட்கவில்லை,” என்று கூறிஉள்ளார். 

நிலத்தின் உரிமையாளர் என்னுடைய மகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டார். என்னுடைய மகளை திரும்ப பெறமுடியாது என்றும் கூறிவிட்டார் என்று கண்ணீருடன் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. 

2 மில்லியன் பாகிஸ்தானியர்கள் ‘மார்டன் அடிமைகளாக உள்ளனர்’  2016 உலக அடிமைத்தன குறியீட்டு அறிக்கையின்படி பாகிஸ்தான் முதன்மை இடத்தை பிடித்து உள்ளது. மக்களை அடிமைப்படுத்தும் நிலையானது இன்றளவும் அங்கு தொடர்கதையாக உள்ளது. சிறுபான்மையின மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிவருகின்றனர். பண்ணை, செங்கல் உலைகள் மற்றும் பிற பணிகளுக்கு அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். 

 பாகிஸ்தான் நாட்டில் கொத்தடிமைகளை விடுவிப்பதற்காக செயல்பட்டு வரும் பசுமை கிராம அபிவிருத்தி அமைப்பை சேர்ந்த குலாம் ஹைதர் பேசுகையில்,  “அவர்களுக்கு உரிமை கிடையாது, அவர்களுடைய பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்,” என்று கூறிஉள்ளார். தெற்கு ஆசியா கூட்டமைப்பு தகவலின்படி வருடம் தோறும் சுமார் 1000 இந்து மற்றும் கிறிஸ்த சிறுமிகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படுகின்றனர், இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். “உரிமையாளர்கள் அழகான பெண்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர்,” என்று ஹைதர் கூறிஉள்ளார். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீரோ கோக்லி என்ற சமூக ஆர்வலரையும் நாடிஉள்ளனர், தங்களுடைய குழந்தைகள் விடுவிக்க. வீரா கோக்லி இவர்களுக்கு சொந்தம் கிடையாது. அவரும் அடிமையாக தன்னுடைய காலத்தை தொடங்கியவர், அடிமைத்தனத்தில் கடந்த 1999-ம் ஆண்டு சிக்கிய அவர் வெளிவந்து பாகிஸ்தானில் உள்ள சக்திவாய்ந்த நில உரிமையாளர்களுக்கு எதிராக போராடி வருகிறார் அடிமையாக உள்ள தொழிலாளர்களை விடுதலை செய்ய.

வீரோ கோக்லி பேசுகையில் “அவர்கள் என்னை கொலைகூட செய்யால் எல்லாம் எனக்கு தெரியும், ஆனால் கொத்தடிமையாக வைக்கப்பட்டு உள்ள மக்களை விடுவிக்கும் வரையில் நான் என்னுடைய போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்படவில்லை,” என்று கூறிஉள்ளார். சிறுமியை மீட்க 5 மாதங்களுக்கு முன்னதாக வீரோ கோக்லி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் காவல் நிலையம் சென்று உள்ளார். சிறுமியிடம் பேச வேண்டும் என்று கேட்டு உள்ளார், ஆனால் பேச சிறுமி விரும்பவில்லை என கூறி போலீஸ் விரட்டிவிட்டது.

சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் பாகிஸ்தானில் பல்வேறு கொடூரங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இதுவரையில் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் கொடூரமான வன்கொடுமைகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இந்துக்கள் வாழுவதற்கு பாகிஸ்தான் நரகமாகிவிட்டது. இப்போது சிறுமிகள், சிறார்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்செயல்கள் தொடர்பான ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகிஉள்ளது. இப்போதாவது இந்த உலகம் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமா? என்ற கேள்வியானது தொடர்கிறது. பாகிஸ்தான் மீடியாக்களும் அரசினை மீறி அங்கு நடக்கும் கொடூரச் சம்பவங்களை வெளிக்கொணர்வது கிடையாது. ஒருசில நேரங்களில் மட்டுமே பல்வேறு இன்னல்களையும் கடந்து இதுபோன்ற செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...