News
Loading...

ரூ.99க்கு அளவில்லாமல் பேச பி.எஸ்.என்.எல்.க்கு மாறுங்கள்

ரூ.99க்கு அளவில்லாமல் பேச பி.எஸ்.என்.எல்.க்கு மாறுங்கள்

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டி போட மிகவும் சலுகை விலையில் பல்வேறு பலன்களைக் கொடுக்கும் ஆஃபர்களை ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கிறது.

1. பி.எஸ்.என்.எல். 99 ரூபாய் ரீச்சார்ஜ் மூலம் நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். எண்களுக்கு முற்றிலும் இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். கூடவே 300MB டேட்டாவும் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.

2. இந்த 99 ரூபாய் ஆஃபர் கர்நாடகா, மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட், அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் ரூ.119 முதல் ரூ.149 வரையான விலையில் கிடைக்கும்.

3. பி.எஸ்.என்.எல். 339 ரூபாய் ரீச்சார்ஜ் மூலம் நாடு முழுவதும் உள்ள எந்த எண்ணுக்கும் முற்றிலும் இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள். கூடவே 1GB டேட்டா கிடைக்கும்.

4. ஏற்கெனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.1099க்கு அளவற்ற 3G டேட்டா ஆஃபரை அளித்து வருகிறது.

5. ஏர்டெல், ஐடியா போன்ற ஜியோவின் மற்ற போட்டியாளர்களும் அண்மையில் தங்கள் பங்குக்கு இலவச வாஸ்ஸ் கால் சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...