News
Loading...

ஜாலியான படம் என்பதால் சம்மதித்தேன்: மகேஸ்வரி!

ஜாலியான படம் என்பதால் சம்மதித்தேன்: மகேஸ்வரி!

‘சென்னை 28’ இரண்டாம் பாகம் ஜாலியான படம் என்பதால் படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்

நடிகை மகேஸ்வரி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணித்து வந்தார். அவர் அதிர்ஷ்டலட்சுமி உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என்று கலக்கி வருகிறார். அதோடு விளம்பர படங்களிலும் நடித்தவர் இப்போது ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சினிமா நடிகையாகவும் களம் இறங்கியுள்ளார்.

அவர் சினிமாவிற்குள் வந்தது பற்றி கூறுகையில், ”நான் மீடியாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை அதிர்ஷ்டலட்சுமி நிகழ்ச்சி எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. வெளியில் போனால் என்னை அதிர்ஷ்டலட்சுமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் வெங்கட்பிரபு என்னைச் சந்தித்தார். சினிமாவில் நடிக்கிறீங்களா என்று கேட்டார். ஏதோ விளையாட்டாக கேட்கிறார் என்று நினைத்து சம்மதம் என்றேன். அதை நினைவில் வைத்து ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருந்தார். ரொம்ப ஜாலியான ஸ்கிரிப்ட், ஜாலியான படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து நல்ல கேரக்டர்கள் அமைந்தால் சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன்’’ என்றார் ‘அதிர்ஷ்டலட்சுமி’ மகேஸ்வரி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...