News
Loading...

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! வர்தா புயல் தீவிரத்தால் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! வர்தா புயல் தீவிரத்தால் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

ந்தமான் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான வர்தா புயல் தற்போது சென்னை உள்ளிட்ட கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று புயல் தாக்கக்கூடும் என்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்றாற்போல், சுமார் 100 கி.மீ வேகத்தில் சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை சென்னையில் பெய்துவருகிறது. இதனால் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பலத்த சூறைக்காற்றால் சென்னை சாலைகளின் நடுவே ஆங்காங்கே மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து வர்தா புயல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாலும், இன்று பிற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயலெல்லாம் எப்போ எத்தனை மணிக்கு எங்கு கரையைக் கடக்கும்னு படம் போட்டு காட்டும் #Live #weather #map உங்கள் News2.inல்...
http://www.news2.in/p/wind-tv.html (Ctrl + D) Bookmark this page

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்