News
Loading...

சென்னையில் வீட்டு மனை வாங்கி தருவதாக நூதன மோசடி .

சென்னையில் வீட்டு மனை வாங்கி தருவதாக நூதன மோசடி .

முகப்பேர் ஸ்பார்ட்டன் நகரில் கே.என்.ஆர் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் நடத்தி வருபவர் சீதாபதி, இவருடன் சவிதா என்ற பெண்ணும், ஜோதிகிருஷ்ணன் எனபவரும் சேர்ந்து கொண்டு கடந்த சில ஆண்டுகளாக குறைந்த விலையில் வீட்டு மனைகள் பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து வந்துள்ளனர். 

முதலில் காலியாக கிடக்கும் வீட்டு மனைகள் தேர்வு செய்யும் இந்த மோசடி கும்பல் அதற்கு உரிமையாளரை போல ஒரு நபரை நடிக்க வைத்து அவர் பெயரில் போலியாக ஆவணங்களையும் தயார் செய்வார்கள். குறைந்த விலையில் வீட்டு மனை என்ற விளம்பரத்தை பார்த்து நம்பி வருபர்களிடம் இடத்தை காண்பித்துவிட்டு முதல் தவணையாக சில லட்சங்களையும் பெற்றுக்கொண்டு வந்துள்ளனர், இதே போன்று பல நபர்களிடம் பணத்தை பெற்று கொண்டு முழு தொகையை செலுத்திய பிறகு இடத்திற்கு பத்திர பதிவு செய்து தரப்படும் என கூறி காலம் தாழ்த்து வந்த நிலையில், முதலில் தவனை முடிந்தவர்கள் நேரடியாக சென்று வீட்டு மனை குறித்து கேட்டதால் சில நாட்கள் பொய்யான காரணங்களை சொல்லி தப்பி வந்துள்ளனர், இதனிடையே திடீரென ரியல் எஸ்டேட் நிறுவனத்தை காலி செய்துவிட்டு மோசடி கும்பல் தலைமறைவாகிவிட பாதிக்கப்ப்பட்டவர்கள் ஜேஜே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான சீதாபதியை கைது செய்து தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். இதுவரை பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். 
கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்படவிருக்கிறது. 

சொந்த வீடு கனவுகளோடு சிறுக சிறுக சேமித்து வீடு கட்ட முயற்சிக்கும் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து சுரண்டும் இது போன்ற மோசடி பேர் வழிகள், மலிவு விலையில் வீட்டு மனை விற்பதாக கொடுக்கும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.