News
Loading...

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

விக்ரம் ஹீரோவாக நடிக்கப்போகும் படத்துக்கு ஹீரோயின் தேடும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில், ‘பிரேமம்’ சாய் பல்லவியை அணுகியுள்ளனர். ஹீரோ யாரென்று சொல்லப்படாததால், முதலில் ஆர்வம் காட்டாமல் இருந்த பல்லவி, ஹீரோ விக்ரம் என்றவுடன் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்த நிலையில், ‘‘விக்ரமுடன் நடிப்பதற்குப் பல்லவியின் சம்பளத்தில் பாதி தந்தாலும் நடிக்கத் தயார்’’ என ‘அச்சம் என்பது மடமையடா’ நாயகி மஞ்சிமா மோகன் அதிரடியாக அறிவித்து இருக்கிறாராம்.

லையாள சினிமா பிரபலங்கள் திலீப் - காவ்யா மாதவன் திருமணம் சமீபத்தில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் நெருக்கமாக இருந்த நடிகை பாவனாவுக்கு அழைப்பு இல்லை. ‘திலீப்புக்கும் காவ்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டபோது, அந்த விஷயத்தை திலீப்பின் மனைவி மஞ்சுவாரியரிடம் போட்டுக்கொடுத்தவர் பாவனா. அதனால் அவருக்கு அழைப்பு இல்லை’ என செய்தி வெளியானது. அதனால், மீடியாக்கள் மீது பாய்ந்திருக்கிறார் பாவனா. 

பாலிவுட் கஜோல் தமிழ் படத்தில் நடித்து 19 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போது, ‘வேலையில்லா பட்டதாரி - 2’ படத்தில், முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘கலைப்புலி’ தாணு தயாரிப்பில், செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் பிறந்த நாளில் தொடங்கத் திட்டமிட்டு உள்ளனர். சரத்குமாரும் நடிப்பதாக முன்பு சொன்னார்கள். இப்போது ‘இல்லை’ என்கிறார்கள்.

ஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துவரும் எமி ஜாக்ஸனுக்கு தலை கால் புரியாத சந்தோஷம். ‘ரஜினி சார் எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார்... என்கிட்டே அம்புட்டு சிம்பிளா பழகுறார்! என்னோடு காதல் காட்சிகளில் நடிக்கும்போது, ரொம்பவும்  கூச்சப்படுறார். ஷங்கர் சார் டைரக்‌ஷன் செய்யுற இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அதனால, ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு நெர்வஸா இருக்கு’ என நெகிழ்ந்து போகிறாராம், தேம்ஸ் நதி தேசத்து அழகி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...