News
Loading...

முதல்வர் நாற்காலிக்கு முட்டி மோதும் போட்டி!! ஓ.பி.எஸ், சசிகலாவை எதிர்த்து தீபா?!

முதல்வர் நாற்காலிக்கு முட்டி மோதும் போட்டி!! ஓ.பி.எஸ், சசிகலாவை எதிர்த்து களமிறங்கும் தீபா ஜெயகுமார்..?!

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பை தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

கட்சி எம்.எல்.ஏக்கள் தற்போது ஒரு மனதாக ஓ.பி.எஸ் தலைமையில் செயல்பட தயார் என்று அறிவித்து, அவர் தான் முதல்வர் என்று தேர்ந்தெடுத்திருந்தாலும், இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை.

காரணம் தற்போது சசிகலா கட்சியில் பதவி கேட்டு தகராறு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் பட்சிகள் கூறுகின்றன.

இந்த குடுமிப்பிடி சண்டை ஓயாமல் போய் கொண்டிருக்க, தற்போது இவர்களுக்கு போட்டியாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா களமிறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது, கேள்வி என்னவென்றால், ஒருவேளை ஜெயலலிதாவின் ரத்த உறவு தீபா தான் என்பதால் அவரை மக்கள் ஆதரிப்பார்களா? தீபாவை முதல்வராக மக்கள் தேர்ந்தெடுப்பார்களா? அப்படி, தேர்ந்தெடுத்தால் , ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவின் நிலைமை என்ன ஆகும், கட்சி எம்,எல்.ஏக்கள் யார் பக்கம் சாய்வார்கள் என்பது தான்.

இந்த முக்கோண போட்டியில், நடுவில் இருக்கும் இந்த நாற்காலியை பிடிக்கப்போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்