News
Loading...

நாளை பிரதமரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்!! ஜெ.,வுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை!!

நாளை பிரதமரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்!! ஜெ.,வுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை!!

மிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று டெல்லி செல்லும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதில், வர்தா புயல் நிவாரண நிதி வழங்க கோரி பிரதமரிடம் மனு அளிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த தமிழக முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்க கோரியும், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க கோரியும் பிரதமரிடம் கோரிக்கை வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை முதல்வர் பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அளிப்பார் என்று தமிழக அரசு செய்தி     குறிப்பில்  வெளியிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்