News
Loading...

தமிழகத்தில், சுகாதாரச் சீர்கேடு நிலவ காரணமே ராம மோகன் ராவ் தான்?

தமிழகத்தில், சுகாதாரச் சீர்கேடு நிலவ காரணமே ராம மோகன் ராவ் தான்?

லைமைச் செயலாளராக, நெருங்க முடியா மனிதராக இருந்தவர் ராமமோகன் ராவ்.

ஆனால் இதுவெல்லாம் பழைய கதை. இப்போது அவர் எந்த அதிகாரமும் இல்லாத மனிதர்.

பத்மா எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தக்காரர். இந்த நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு துப்புரவு தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குகிறது.

இதற்காக அரசிடம் இருந்து ஒரு தொகையை பெற்றுக்கொள்ளும். தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனமே நேரடியாக சம்பளத்தை வழங்கும்.

இதில் தான் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாம். அதாவது ஆயிரம் தொழிலாளர்களை அனுப்புகிறோம் என்று கூறி அதற்கு பணத்தை பெற்றுக் கொள்வார்களாம்.

ஆனால் 600 பேரை தான் அனுப்புவார்களாம். மீதி உள்ள 400 பேரின் சம்பளத்தை இவர்களே வாங்கி வைத்துக் கொள்வார்களாம்.

இதுவே மருத்துவமனைகளை அதிகம் கொண்ட தமிழகத்தில், சுகாதாரச் சீர்கேடு நிலவ காரணம் என கூறப்படுகிறது. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என சில தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இப்படிபட்ட ஒருவரை ஜெயலலிதா எப்படி தனது ஆதரவாளராக வைத்துக்கொண்டார் என கேள்வி எழுப்புகின்றனர். ஜெயலலிதாவிற்கு இது தெரிந்திருந்தால் அவர் விட்டிருக்க மாட்டார் என்றும் அவரை ஏமாற்றியே தனது காரியங்களை ராமமோகன் ராவ் சாதித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...