News
Loading...

தமிழக முதல்வர் ஓபிஎஸ் தீபாவுக்கு ஆதரவா..!? பரபரப்பான திருச்சி..!!

தமிழக முதல்வர் ஓபிஎஸ் தீபாவுக்கு ஆதரவா..!? பரபரப்பான திருச்சி..!!

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஏற்கவும், கட்சியை தலைமை ஏற்று நடத்தவும் சசிகலாவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் படங்களும் செய்திகளும், அவரின் அத்தை மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிமுகவில் பல தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, சசிகலாவை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நாளை அதிமுகவின் பொதுக்குழு கூடவுள்ள நிலையில், திருச்சி மாநகரத்தில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் தீபா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியை வழிநடத்திச் செல்லவும், துரோகிகளுக்கு வழிவிடாதீர்கள் என்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரால், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கோணத்தில் திருச்சி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்