News
Loading...

தீபாவிற்கு சின்னத்தாய் பட்டம் வழங்கிய அதிமுகவினர்..!

தீபாவிற்கு சின்னத்தாய் பட்டம் வழங்கிய அதிமுகவினர்..! சின்னம்மாவுக்கு சரியான போட்டி..!!

திண்டுகல் மாவட்டம் நத்தம், பழனி கோதைமங்கலம் உள்பட பல இடங்களில் ஜெ.யின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அதிமுகவினர் சின்னம்மாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டள்ள போஸ்டர்கள், பேனர்கள் கிழிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த கனிபாலு என்பவர் ஜெ.யின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை திண்டுக்கல், கொடைக்கானல், வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தார்.

சசிகலாவுக்கு சின்னம்மா என்ற பெயர் கொடுக்கப்பட்டிருப்பது போல, இந்த போஸ்டரில் தீபாவிற்கு சின்னத்தாய் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் நிதியை நீதி வென்றது -நேற்று, நீதியை நிதி வென்றது -இன்று சின்னத்தாய் தீபாவே தமிழகத்தை தலைமை ஏற்க தகுதியானவர் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்