News
Loading...

மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாா்.! ஜெ. அண்ணன் மகள் அறிவிப்பு.!

மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாா் …!!! ஜெ. அண்ணன் மகள் அறிவிப்பு!

க்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாா் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளாா்.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது ரத்த சொந்தமான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை மருத்துவமனையின் உள்ளே விடாமல் துரத்தி அடித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயா  ரத்த உறவுகள் யாரையும் பார்க்காமலேயே இறந்தார்.

பொதுமக்கள் அஞ்சலிக்கு முதல்வரின் உடல் வைக்கப்பட்ட போது பொதுமக்களோடு பொதுமக்களாக தான் தீபா அனுமதிக்கபட்டார். உடல் அருகே நிற்க கூட விடாமல் திருப்பி அனுப்பினர்.

தீபாவின் சகோதரர் தீபக் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்ற உயில் எழுதப்படாத பட்சத்தில் அது தீபக்கிற்கு சென்று சேரும் என்பதால் அவர் தற்போது போயஸ்கார்டனின் ‘அன்பு கவனிப்பில்’ இருக்கிறாராம்.

இது குறித்து தீபா ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தனது அத்தையை போலவே ஆங்கிலத்தை நுனிநாக்கில் சரளமாக பேசினார். நான் பிறந்தது போயஸ் இல்லத்தில்தான். ஆனால் பிற்காலத்தில் எங்கள் குடும்பம் சசிகலாவால் வெளியே விரட்டப்பட்டது.

எனது அத்தை அவரது ரத்த உறவுகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார். எனது அத்தை சிறையில் அடைக்கப்பட காரணமே அவரை சுற்றி இருந்த மோசமான நபர்கள்தான்.

எனது அத்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டபோது அவருக்கு உரிய பராமரிப்பு கொடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் அவரருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல் வெளியே தெரிவிக்கப்படவில்லை. சரியான நேரத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனது அத்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தளவில் ஜெயலலிதாவுக்கு பிறகு யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படவில்லை.

ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன். இவ்வாறு தீபா தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...