News
Loading...

சசிகலாவை நெருக்கும் வழக்குகள்..! கட்சியை காப்பாற்ற காத்திருக்கும் தீபா…!

சசிகலாவை நெருக்கும் வழக்குகள்..! கட்சியை காப்பாற்ற காத்திருக்கும் தீபா…!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்மாவின் வழியில் கட்சியியை சின்னம்மா வழிநடத்தி செல்வார் என்று நிர்வாகிகள் தங்கள் விசுவாசத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிக்கும் வேளையில், உயர்நீதிமன்றத்தில் ஜெ., மரணம் தொடர்பாக ஜோன்ஸ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு மற்றும் வருமான வரித்துறை சோதனை போன்றவைகளால் சசிகலா நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெ.,வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பேன் என்றும், அதுவரை தொண்டர்கள் அமைதி காக்கவும் என்றும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏதாவது ஒரு வழக்கில் சசிகலாவுக்கு  எதிராக தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அப்போது கட்சியை தன் கைவசம் கொண்டு வரலாம் என்றும் தீபா கருதுவதாக தெரிய வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...