News
Loading...

தீபாவே சின்னம்மா..! இது தீபா ஸ்பெஷல்..!!

தீபாவே சின்னம்மா..! இது தீபா ஸ்பெஷல்..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஜெ.தீபா ஆதரவு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த கூட்டத்துக்கு திடீர் என்று அனுமதி மறுக்கப்பட்டது.மண்டபம் பூட்டப்பட்டது. இதனால் அதிமுகவினரில்  தீபாஆதரவாளர்கள்சாலையோரம்  நின்றனர்.

அடுத்ததாக  கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் சசிகலாவை அ.தி.மு.க வின் தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

அந்த போஸ்டரில் சசிகலா புகைப்படம் இருந்தது. இதைக்கண்டு கோபமுற்ற அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வரும் புஷ்பா மாட்டு சாணத்தை வீசியுள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல் துறையினர் அப்புறப்படுத்தி கிழித்து எறிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கு பின்னணியில் தீபா ஆதரவாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக சசிகலா வரக்கூடாது என்பதற்காகத்தான் போஸ்டரில் மாட்டுச்சாணத்தை வீசியதாகவும், அம்மாவின் வாரிசான தீபா அதிமுக வின் பொதுசெயலாளராக வந்தால் தாம் வரவேற்பதாகவும், எக்காரணத்தைக்கொண்டும் சசிகலாவை பொதுச்செயலாளராக வரவிடக்கூடாது என்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...