News
Loading...

அரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

அரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

ரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். தற்போது, சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதா உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியிருந்து விமானம் மூலம், சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைரியமான அரசியல் தலைவரான ஜெயலலிதா ஏழைகளுக்காக பாடுபட்டவர் என குறிப்பிட்டார். மேலும், அரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் புகழாரம் சூட்டினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...